Thursday 19 July 2012

அம்மாவின் அடக்குமுறை இனி என்னிடம் செல்லாது...,

அம்மா!  என் ஃப்ரெண்ட்ஸ்லாம் சினிமாக்கு போறாங்க நானும் போகவா?
தனியாலாம் போக வேணாம், இந்த வீக் எண்ட்ல அப்பாவோட தம்பி, தங்கச்சியை கூட்டி போய் பார்த்துட்டு வா.

அம்மா! எனக்கு ட்ரெஸ் எடுக்கனும்.., போய் வரவா?
நீ தனியாலாம் போகவேணாம், நானும் வரேன்.

அம்மா! என் ஃப்ரெண்ட்ஸ்லாம் ஃபேஸ்புக், ஆர்குட் அது இதுன்னு அக்கவுண்ட் ஓப்பன் பண்ணியிருக்காங்க. நானும் அக்கவுண்ட்ஓப்பன் பண்ணிக்கட்டுமா?
நீ சின்ன பொண்ணு. அதெல்லாம் வேணாம்.

அம்மா! ஃப்ரெண்ட்ஸ்கிட்ட பேச எனக்கு மொபைல் வாங்கி தாங்கப்பா.
ஸ்கூல் படிக்குற பிள்ளைக்கு போன் எதுக்கு? எதுவா இருந்தாலும் என் போன்லயே  பேசிக்கோ.

அம்மா! இன்னிக்கு ஒரு நாள் சைக்கிள்ல போகாம ஸ்கூட்டில ஸ்கூல் போய் வரேனே ப்ளீஸ்.
 இன்னும் உனக்கு டிரைவிங்க் லைசென்ஸ் வாங்கலை. அதுக்குள்ள வண்டியா? சின்ன பொண்ணா லட்சணமா சைக்கிள்லயே போய் வா.

அம்மா! நீ இந்த தேர்தல்ல யாருக்கு ஓட்டு போடப்போறே?
நீ சின்ன பொண்ணு உனக்கு ஏண்டி அரசியல்லாம்?

இப்படி எதுக்கெடுத்தாலும் நீ சின்ன பொண்ணு, நீ சின்ன பொண்ணுன்னு என்னை டபாய்ச்சுக்கிட்டு வந்த என் அம்மா..., இனி டபாய்க்க முடியாது. ஏன்னா, இன்னியிலிருந்து எனக்கு 18 வயசு.

                                                          
இனி, நான் வண்டி ஓட்டலாம், ஓட்டு போட்டு தலைவர்களை தேர்ந்தெடுக்கலாம். போன் வாங்கலாம். பாஸ்போர்ட், விசா வாங்கி வெளிநாட்டுக்கு போயும் படிக்கலாம்.  ஐ ஜாலி! ஜாலி!
                                                
நான் சொன்னதுலாம் சரிதானுங்களே! இனி, அம்மாவோட அடக்குமுறை என்கிட்ட செல்லாதுதானே?!       

டிஸ்கி: தலைப்பு சும்மா அட்ராக்‌ஷனுக்கு.     இன்னிக்கு எனக்கு பர்த் டே. அதனால, கீழ இருக்குற கேக் எடுத்துக்கிட்டு பெரியவங்கலாம் என்னை வாழ்த்துங்க.