Saturday, 25 February 2012

வாழ்த்தலாம் வாங்க....,

                               

வாழ்த்துக்கள் உறவுகளே!
வாழ்த்துக்கள் உங்களிற்கு!
வாழ்த்துக்கள் உறவுகளே!
வாழ்த்துக்கள் எனது!
உள்ளம் இணைந்த இல்லம்
என்றும் இனிக்கும் வெல்லம்!

வானும் நிலவும் போல!
இணைந்து வாழ வேண்டும்!
காலச்சுழற்சி கொள்ளும் நிலவு
வானுள் கரைந்தும் வளரும்!

இன்பம் மட்டும் கூட்டி!
இதய இராகம் மீட்டி! எந்த
நிலையின் போதும் மாறா
அன்பை மட்டும் ஊட்டி!

வாழ வேண்டும் நீங்கள்
வாழ்த்துகின்றோம் நாங்கள்!
தமிழும் சுவையும் போல!
கவியும் இசையும் போல....,
 குழந்தை செல்வத்துடன்
குதுகுலமாய் வாழ வாழ்துகிறேன்!

எத்தனை இன்பம்
இந்த நிமிடத்திலே!
கொட்டும் மழையும்
பூவாய் பொழிய.....,

அத்தனை தேவர்களும்
ஒருங்கே வாழ்த்த
உங்கள் திருமண வாழ்க்கை
மகிழ்வாய் அமைய
வாழ்த்துகிறேன்.

அன்புடன்,
தூயா.
டிஸ்கி: என் மாமா, மாமிக்கு இன்று இரண்டாம் ஆண்டு திருமண நாள் . அவங்களை வாழ்த்த வயதில்லை அதனால், வணங்குகிறேன்.

Wednesday, 22 February 2012

பெண்வேங்கை...,



                                   
                     
      எல்லாருக்கும் பள்ளி வாழ்க்கையில் அறிவு, அடக்கம், அனுபவங்கள், ஃப்ரெண்ட்ஸ்லாம் கிடைப்பாங்க. ஆனால், எனக்கு மட்டும் ஒரு அண்ணா கிடைச்சு இருக்கான். 5ஆம் வகுப்புல இருந்து என்னோட படிச்சாலும் அதிகமா பேசிக்கிட்டதில்ல.  ஏன்னா என்  ஸ்கூல் ரொம்ப ஸ்டிரிக்ட்டு, ஸ்டிரிக்ட்டு, ஸ்டிரிக்ட்டு( பயப்படாதீங்க எக்கோதான்...,)

ஃபேர்வெல் டே பார்ட்டில  எனக்காக வாசித்த கவிமடல் உங்க பார்வைக்கு....,

அன்பு தங்கையே! 

இதுவரை சில  வார்த்தைகள் மட்டுமே பேசி இருக்கின்றோம்.
பிரியும்பொழுது பேசும் வார்த்தை எதுவும் உயர்ந்ததில்லை,
மனம் நிறைய வார்த்தைகள் இருந்தும் பேச முடியவில்லை.
பேச நேரம் குறைந்து வருகிறது.., இப்போதும் வார்த்தை வரவில்லை..,

பார்த்து கொண்டிருந்தபோது புரிந்து கொள்ளவில்லை...,
புரிந்து கொண்டபோது பார்க்க முடிய போவதில்லை
நம் உறவுகள் இனிமையானவை.  ஆனாலும் தவறுகள் இல்லை.
பிறந்தோம் என்பதே முன்னுரையாம். 

நாம் பேசின மொழி என்பதே தாய்மொழியாம்,
மறந்தோம் என்பதே நித்திரையாம்..,
மரணம் என்பதே முடிவுரையாம்.

தங்கையாய் என்னில் கலந்து விட்டாய்- நீயொரு
பெண்வேங்கை என்பதில் நினைவில் கொள்.
தொடராமல் முடிந்தால் அது உறவு...,
முடிந்தும் தொடர்ந்தால் அது நட்பு....,


அன்புடன்
உன் பாசமிகு அண்ணன்
அ.பாபு

டிஸ்கி: இந்த பாசம் என்றென்றும் தொடர இறைவனை வேண்டிக்கோங்க ப்ளீஸ்



Monday, 13 February 2012

வெற்றிக்கு வெற்றி கிடைக்க வாழ்த்துங்கள்...,



                                          

எல்லாருக்கும்  வணக்கம்...,

    வாங்க, வாங்க..., என்னையும் மதிச்சு, என் அம்மாவோட அழைப்பை ஏற்று  பெரியவங்கலாம் என் புது வீட்டு கிரகபிரவேசத்துக்கு வந்திருக்கீங்க. ரொம்ப நன்றிங்க. இன்னிக்கு ரொம்ப விசேஷமான நாள் அதனாலதான் இந்த கிரகப்பிரவேசத்தை இன்னிக்கு வச்சுக்கிட்டேன். என்ன விசேஷம்ன்னு தெரிஞ்சுக்க ஆவலா இருக்கீங்களா?! அந்த ஆவல் சில நொடிகள் நீடிக்கட்டும்..., இன்னிக்கு நல்ல நாள், கூடவே கிரகப்பிரவேசம் வேற அதனால முதல்ல ஸ்வீட் எடுத்துக்கோங்க...,
                                    


   ஸ்வீட் எடுத்துக்கிட்டீங்களா? என்ன விசேஷம்ன்னு சொல்லவா? ம்க்கும்   காதலர் தினம் இன்னிக்கு  அதைவிட வேறென்ன விசேஷம் இருக்கப் போவுது இந்த காலத்து பிள்ளைங்களுக்குன்னு நீங்க மனசுக்குள்ள நினைக்குறது எனக்கு கேட்குது . ஆனால், நீங்க நினைக்குற மாதிரி காதலர் தினம்லாம்  இல்ல.

                                   

    என் மாமாவோட பையனுக்கு இன்னிக்கு பிறந்தநாள். அப்பிடி வா வழிக்கு மாமா பையனா? அதான் இந்த அலட்டலான்னு நீங்க முணுமுணுக்குறதும் எனக்கு கேட்குது. நீங்க நினைக்குற மாதிரி  மாமா பையன் பெரிய்ய்ய்ய்ய்ய பையன்லாம் இல்ல. குட்டி பையன். இன்னிக்கு ஃபர்ஸ்ட் பர்த் டே கொண்டாட காத்திருக்கும் சுட்டிப் பையன். அவன் பேர் “வெற்றி மாறன்”

                                                 (வெற்றி பிறந்து இரண்டாவது நாள்...,)
                       
    மாமா என் அம்மாவுடன் பிறந்தவரில்லை. அம்மவோட ஃபிரண்ட். வெவ்வேறு இடத்தில் பிறந்து, வெவ்வேறு சூழ்நிலையில் வளர்ந்து இருபது வயதில் ஃப்ரெண்டானாங்க. ஆனால், என்னமோ காலங்காலமா பழகுன மாதிரி ரெண்டு பேரும் நடந்துப்பாங்க. ரெண்டு பெருமே அடுத்தவங்க நல்லது கெட்டதுல தோள் குடுத்து தாங்கி நிற்பாங்க. மாமா வெளிநாட்டுல வேலை செய்றார். ரெண்டு பேருக்கும் சண்டை வரும். கோவிச்சுக்கிட்டு இனி பேச மாட்டேன்ன்னு சொல்லிட்டு போய்டுவாங்க. 
                      
   அடுத்த அஞ்சு நிமிசத்துல ஈகோலாம் இல்லாம பேச ஆரம்பிச்சு மறுபடியும் சண்டை போடுவாங்க. என்ன சண்டைன்னு போய் பார்த்தால் தன் மேலதான் தப்புன்னு ரெண்டுபேரும் போட்டி போட்டுக்கிட்டு சாரி சொல்லிக்கிட்டு செல்ல சண்டை போடுவாங்க. சும்மாதான் போன் பண்ணேன்னு சொல்லி ஆரம்பிச்சு ஐன்ஸ்டீன் முதல் விஜயகாந்த் வரை...., போன் சூடேறி என்னை விட்டுடுங்களேன் நான் டயர்டா இருக்கேன்னு கெஞ்சி கதறி கேட்கும்வரை பேசுவாங்க. எங்க மாமியும் மாமாவை போலவே எங்க குடும்பத்தோட பாசமா நடந்துப்பாங்க. அம்மாவுக்கு தூய நட்போடு மாமா கிடைத்த மாதிரி எனக்கும் தோள் குடுக்க ஒரு தோழன் கிடைப்பானான்னு அவங்க ரெண்டு பேரையும் பார்த்து பொறாமைப்படுவேன். 
                    
அவங்க நட்பை கடவுளே ஆசிர்வதிச்ச மாதிரி இரண்டு விசயங்கள் நடந்துச்சு. 1. மாமாவோட கல்யாணத்தன்னிக்குதான் எனக்கு வாழ்க்கையின் முக்கியமான ஒரு விசயம் நடந்துச்சு. அம்மாவோட நட்சத்திரமும் ராசியும்தான் வெற்றி மாறனுக்கும்.

     மாமாவை நான் ஒண்ணாம் வகுப்பு போகும்போதுதான் முதன்முதலா பார்த்தேன். அப்போ அவரை பார்த்து பயந்து பேசக்கூட மாட்டேன். அம்மா பின்னாடி நின்னுதான் அவர் கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்வேன். அப்புறம் மாமாவோட பாசத்துல இப்போ என் அம்மாவைவிட நாந்தான் அவருக்கு உயிர். நான் ஸ்கூலுக்கு போகும்போதெல்லாம் பார்த்து போன்னு சொல்லி நான் ரோட்டை கிராஸ் பண்றவரை பார்த்துட்டுதான் போவார். சைக்கிள், வண்டி பழகி இப்பலாம் சூப்பரா ஓட்டுறேன். இருந்தாலும் என்னை சின்ன பிள்ளையாவே இன்னும் நினைச்சுக்கிட்டு வண்டிலாம் தூயாக்கிட்ட குடுக்காத. ரோடுல எவ்வளவு டிராஃபிக்ன்னு அம்மாவை எனக்காக கோவிச்சுக்குவார்.

    அம்மா என்னை கோவிச்சுக்கும்போதெல்லாம்...,  தூயா நான் வளர்த்த பொண்ணு, எந்த தப்பான வழிக்கும் போக மாட்டா. நல்ல பொண்ணு, நல்லா படிச்சு முன்னுக்கு வருவா பாரு. எனக்கு எத்தனை பிள்ளை பிறந்தாலும் தூயாதான் என் மூத்த பொண்ணுன்னு அன்பா சொல்வாராம். அம்மாக்கிட்ட எனக்கு ஆதரவா பேசும் அதே நேரத்துல அம்மா பேச்சை கேளு அம்மாவுக்கு நல்ல பேர் எடுத்து குடு. என் ஆபீசுல எனக்கு மேலதிகாரியா வந்து என்னை நீ மிரட்டனும் தூயான்னு எனக்கு அட்வைஸ் பண்ணுவார். அவர் நம்பிக்கையை காப்பாத்த என்னாலான முயற்சிகளை செய்றேன். அதே நேரத்துல கடவுளோட ஆசிர்வாதமும் எனக்கு அமையனும்.  அதுக்கு உங்க எல்லாருடைய வேண்டுதலும் எனக்கு வேணும்.
(அந்த குட்டி பையனுக்கு என் பர்த் டே கிஃப்ட்...,)
                       
எங்க அம்மாவைவிட நான் சூப்பரா கவிதை எழுதுனும்ம்ன்னு முயற்சி பண்ணேன். ஆனால் பருங்க எக்ஸம் டென்சனில் வெற்றியோட பிறந்த நாளுக்கு எவ்வளவு யோசிச்சும் கவிதை வரலை. “வெற்றி” என்ற பேரே  அழகான கவிதையா பட்டதால் இந்த பதிவுக்கு அதையே தலைப்பாக்கிட்டேன். எப்பூடி...,

என்னடா பையனுக்கு பர்த்டே. ஆனால், அப்பாவை பத்தி புராணம் பாடுதே இந்த பொண்ணுன்னு நினைக்காதீங்க. அவன் இப்போ குட்டியா இருக்குறதால் அவனை பத்தி எழுத ஒண்ணுமில்லை. இனிதான் பேச, நடக்க, உடைக்கன்னு எல்லாம் செய்ய ஆரம்பிப்பான். அவனோட அடுத்த பிறந்த நாள் போஸ்ட்டை பாருங்க அவனை பத்தி எழுதி கல்க்கிடுறேன்..., 

எங்க வெற்றி வாழ்க்கையில எல்லாவிதமான வெற்றியும் கிடைச்சு நல்ல படியா வாழனும்ன்னு எனக்காக வேண்டிக்கிட்டு ஆசிர்வதியுங்கள் ப்ளீஸ்..., 

டிஸ்கி: பதிவெழுதுனா டிஸ்கின்னு ஒண்ணு எழுதனுமாமே. அதனால எழுதுறேன். இது என்னோட முதல் பதிவு. எல்லாமே என் முயற்சி எப்படி இருக்குன்னு சொல்லுங்க ரொம்ப கும்மிடாதீங்க அப்புறம்.... நானும் கும்ம ஆரம்பிச்சுடுவேன்.
   எனக்கு பொது தேர்வு நெருங்குறதால மார்ச் மாசம் வரை எப்பவாவது சில பதிவு போடுவேன். பரிட்சை முடிஞ்சபின் அடிக்கடி போடுவேன் அதுக்கு உங்க ஆதரவு வேணும்.