Wednesday 22 February 2012

பெண்வேங்கை...,



                                   
                     
      எல்லாருக்கும் பள்ளி வாழ்க்கையில் அறிவு, அடக்கம், அனுபவங்கள், ஃப்ரெண்ட்ஸ்லாம் கிடைப்பாங்க. ஆனால், எனக்கு மட்டும் ஒரு அண்ணா கிடைச்சு இருக்கான். 5ஆம் வகுப்புல இருந்து என்னோட படிச்சாலும் அதிகமா பேசிக்கிட்டதில்ல.  ஏன்னா என்  ஸ்கூல் ரொம்ப ஸ்டிரிக்ட்டு, ஸ்டிரிக்ட்டு, ஸ்டிரிக்ட்டு( பயப்படாதீங்க எக்கோதான்...,)

ஃபேர்வெல் டே பார்ட்டில  எனக்காக வாசித்த கவிமடல் உங்க பார்வைக்கு....,

அன்பு தங்கையே! 

இதுவரை சில  வார்த்தைகள் மட்டுமே பேசி இருக்கின்றோம்.
பிரியும்பொழுது பேசும் வார்த்தை எதுவும் உயர்ந்ததில்லை,
மனம் நிறைய வார்த்தைகள் இருந்தும் பேச முடியவில்லை.
பேச நேரம் குறைந்து வருகிறது.., இப்போதும் வார்த்தை வரவில்லை..,

பார்த்து கொண்டிருந்தபோது புரிந்து கொள்ளவில்லை...,
புரிந்து கொண்டபோது பார்க்க முடிய போவதில்லை
நம் உறவுகள் இனிமையானவை.  ஆனாலும் தவறுகள் இல்லை.
பிறந்தோம் என்பதே முன்னுரையாம். 

நாம் பேசின மொழி என்பதே தாய்மொழியாம்,
மறந்தோம் என்பதே நித்திரையாம்..,
மரணம் என்பதே முடிவுரையாம்.

தங்கையாய் என்னில் கலந்து விட்டாய்- நீயொரு
பெண்வேங்கை என்பதில் நினைவில் கொள்.
தொடராமல் முடிந்தால் அது உறவு...,
முடிந்தும் தொடர்ந்தால் அது நட்பு....,


அன்புடன்
உன் பாசமிகு அண்ணன்
அ.பாபு

டிஸ்கி: இந்த பாசம் என்றென்றும் தொடர இறைவனை வேண்டிக்கோங்க ப்ளீஸ்



14 comments:

ராஜி said...

இந்த பாசம் என்றென்றும் தொடர வாழ்த்துக்கள்

சம்பத்குமார் said...

//தங்கையாய் என்னில் கலந்து விட்டாய்- நீயொரு
பெண்வேங்கை என்பதில் நினைவில் கொள்.
தொடராமல் முடிந்தால் அது உறவு...,
முடிந்தும் தொடர்ந்தால் அது நட்பு....,//

வணக்கம் சகோ..

வலைக்கு இன்றுதான் முதல் வருகை.

மாசில்லா தூய நட்பில் சகோதரத்துவம் பரவிக்கிடக்கும் என்பதை நினைவூட்டுகிறது.

இந்த சகோதரத்துவம் நீடூழி நிற்க மனமார்ந்த வாழ்த்துக்கள்

நன்றி
சம்பத்குமார்

பால கணேஷ் said...

பெண் மானாக இருத்தல் இக்காலத்தில் சரிவராது. பெண் வேங்கையாக இருத்தலே நன்று. அழகாகச் சொல்லியிருக்கிறார். இந்த பாசம் என்றென்றும் தொடர என் இதயபூர்வமான நல்வாழ்த்துக்கள்!

பால கணேஷ் said...

பெண் வேங்கை! இன்றைய காலகட்டத்தில் பெண் மானாய் இருக்கக் கூடாது, வேங்கையாய்த்தான் இருக்க வேண்டும். அழகாகச் சொல்லியிருக்கிறான் சகோதரன். நன்று. இந்த பாசம் என்றென்றும் தொடர என் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்.

Admin said...

சிறப்பு.வேண்டிக்கொள்கிறேன்.

Avargal Unmaigal said...

இந்த மாதிரி நல்ல நட்பை இந்திய பள்ளி கூடங்களில் காணலாம். உங்கள் நட்பு என்றும் தொடர வாழ்த்துக்கள்.அது போல உனது நட்பை ஒரு குறுகிய வட்டத்துடன் நிறுத்தி கொள்ளாமல் உலகெங்கும் படர விடு தேவதையே. வரும் தேர்வுகளில் நன் கு வெற்றி பெற எனது அட்வான்ஸ் வாழ்த்துக்கள்

சம்பத்குமார் said...

வணக்கம் சகோதரி….இன்றைய வலைச்சரத்தில் தங்களது வலைத்தளத்தினை அறிமுகப்படுத்தியுள்ளேன்.ஓய்வு நேரத்தில் வலைச்சரம் வந்து வாசித்து செல்ல அன்புடன் அழைக்கின்றேன்
ஜொலிக்கும் பெண் சிற்பிகள்

அன்புடன்
சம்பத்குமார்

பால கணேஷ் said...

இன்னிக்கு வலைச்சரத்துல அறிமுகம் செயயப்பட்டிருக்கற தூயாவுக்கு மிகமிகமிக சந்தோஷத்தோட என் வாழ்த்துக்களைத் தெரிவிச்சுக்கறேன்!

Suresh Subramanian said...

என் வாழ்த்துக்களைத் தெரிவிச்சுக்கறேன்!....www.rishvan.com

தமிழ்வாசி பிரகாஷ் said...

நல்ல கவிதை சகோதரி...
உங்கள் பாசம் மேலும் சிறப்புற வாழ்த்துகிறேன்.

தமிழ்வாசி பிரகாஷ் said...

வலைச்சரத்தில் அறிமுகமாக வந்துட்டிங்க.

வாழ்த்துக்கள் தூயா.

ஆச்சி ஸ்ரீதர் said...

அண்ணன் தங்கை பாசத்தில் நான் படிக்கும் முதல் கவிதை இது.வலைச்சர அறிமுகத்திற்கும் வாழ்த்துகள்.

முத்தரசு said...

//தொடராமல் முடிந்தால் அது உறவு...,
முடிந்தும் தொடர்ந்தால் அது நட்பு....,
//

கண்டிப்பாக...

வாழ்த்துக்கள்

Avargal Unmaigal said...

அழகான கவிதை எழுதி மாமா மாமியை வாழ்த்திய உங்களுக்கும் அவர்களுக்கும் எனது வாழுத்துக்கள்