Monday, 13 February 2012

வெற்றிக்கு வெற்றி கிடைக்க வாழ்த்துங்கள்...,



                                          

எல்லாருக்கும்  வணக்கம்...,

    வாங்க, வாங்க..., என்னையும் மதிச்சு, என் அம்மாவோட அழைப்பை ஏற்று  பெரியவங்கலாம் என் புது வீட்டு கிரகபிரவேசத்துக்கு வந்திருக்கீங்க. ரொம்ப நன்றிங்க. இன்னிக்கு ரொம்ப விசேஷமான நாள் அதனாலதான் இந்த கிரகப்பிரவேசத்தை இன்னிக்கு வச்சுக்கிட்டேன். என்ன விசேஷம்ன்னு தெரிஞ்சுக்க ஆவலா இருக்கீங்களா?! அந்த ஆவல் சில நொடிகள் நீடிக்கட்டும்..., இன்னிக்கு நல்ல நாள், கூடவே கிரகப்பிரவேசம் வேற அதனால முதல்ல ஸ்வீட் எடுத்துக்கோங்க...,
                                    


   ஸ்வீட் எடுத்துக்கிட்டீங்களா? என்ன விசேஷம்ன்னு சொல்லவா? ம்க்கும்   காதலர் தினம் இன்னிக்கு  அதைவிட வேறென்ன விசேஷம் இருக்கப் போவுது இந்த காலத்து பிள்ளைங்களுக்குன்னு நீங்க மனசுக்குள்ள நினைக்குறது எனக்கு கேட்குது . ஆனால், நீங்க நினைக்குற மாதிரி காதலர் தினம்லாம்  இல்ல.

                                   

    என் மாமாவோட பையனுக்கு இன்னிக்கு பிறந்தநாள். அப்பிடி வா வழிக்கு மாமா பையனா? அதான் இந்த அலட்டலான்னு நீங்க முணுமுணுக்குறதும் எனக்கு கேட்குது. நீங்க நினைக்குற மாதிரி  மாமா பையன் பெரிய்ய்ய்ய்ய்ய பையன்லாம் இல்ல. குட்டி பையன். இன்னிக்கு ஃபர்ஸ்ட் பர்த் டே கொண்டாட காத்திருக்கும் சுட்டிப் பையன். அவன் பேர் “வெற்றி மாறன்”

                                                 (வெற்றி பிறந்து இரண்டாவது நாள்...,)
                       
    மாமா என் அம்மாவுடன் பிறந்தவரில்லை. அம்மவோட ஃபிரண்ட். வெவ்வேறு இடத்தில் பிறந்து, வெவ்வேறு சூழ்நிலையில் வளர்ந்து இருபது வயதில் ஃப்ரெண்டானாங்க. ஆனால், என்னமோ காலங்காலமா பழகுன மாதிரி ரெண்டு பேரும் நடந்துப்பாங்க. ரெண்டு பெருமே அடுத்தவங்க நல்லது கெட்டதுல தோள் குடுத்து தாங்கி நிற்பாங்க. மாமா வெளிநாட்டுல வேலை செய்றார். ரெண்டு பேருக்கும் சண்டை வரும். கோவிச்சுக்கிட்டு இனி பேச மாட்டேன்ன்னு சொல்லிட்டு போய்டுவாங்க. 
                      
   அடுத்த அஞ்சு நிமிசத்துல ஈகோலாம் இல்லாம பேச ஆரம்பிச்சு மறுபடியும் சண்டை போடுவாங்க. என்ன சண்டைன்னு போய் பார்த்தால் தன் மேலதான் தப்புன்னு ரெண்டுபேரும் போட்டி போட்டுக்கிட்டு சாரி சொல்லிக்கிட்டு செல்ல சண்டை போடுவாங்க. சும்மாதான் போன் பண்ணேன்னு சொல்லி ஆரம்பிச்சு ஐன்ஸ்டீன் முதல் விஜயகாந்த் வரை...., போன் சூடேறி என்னை விட்டுடுங்களேன் நான் டயர்டா இருக்கேன்னு கெஞ்சி கதறி கேட்கும்வரை பேசுவாங்க. எங்க மாமியும் மாமாவை போலவே எங்க குடும்பத்தோட பாசமா நடந்துப்பாங்க. அம்மாவுக்கு தூய நட்போடு மாமா கிடைத்த மாதிரி எனக்கும் தோள் குடுக்க ஒரு தோழன் கிடைப்பானான்னு அவங்க ரெண்டு பேரையும் பார்த்து பொறாமைப்படுவேன். 
                    
அவங்க நட்பை கடவுளே ஆசிர்வதிச்ச மாதிரி இரண்டு விசயங்கள் நடந்துச்சு. 1. மாமாவோட கல்யாணத்தன்னிக்குதான் எனக்கு வாழ்க்கையின் முக்கியமான ஒரு விசயம் நடந்துச்சு. அம்மாவோட நட்சத்திரமும் ராசியும்தான் வெற்றி மாறனுக்கும்.

     மாமாவை நான் ஒண்ணாம் வகுப்பு போகும்போதுதான் முதன்முதலா பார்த்தேன். அப்போ அவரை பார்த்து பயந்து பேசக்கூட மாட்டேன். அம்மா பின்னாடி நின்னுதான் அவர் கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்வேன். அப்புறம் மாமாவோட பாசத்துல இப்போ என் அம்மாவைவிட நாந்தான் அவருக்கு உயிர். நான் ஸ்கூலுக்கு போகும்போதெல்லாம் பார்த்து போன்னு சொல்லி நான் ரோட்டை கிராஸ் பண்றவரை பார்த்துட்டுதான் போவார். சைக்கிள், வண்டி பழகி இப்பலாம் சூப்பரா ஓட்டுறேன். இருந்தாலும் என்னை சின்ன பிள்ளையாவே இன்னும் நினைச்சுக்கிட்டு வண்டிலாம் தூயாக்கிட்ட குடுக்காத. ரோடுல எவ்வளவு டிராஃபிக்ன்னு அம்மாவை எனக்காக கோவிச்சுக்குவார்.

    அம்மா என்னை கோவிச்சுக்கும்போதெல்லாம்...,  தூயா நான் வளர்த்த பொண்ணு, எந்த தப்பான வழிக்கும் போக மாட்டா. நல்ல பொண்ணு, நல்லா படிச்சு முன்னுக்கு வருவா பாரு. எனக்கு எத்தனை பிள்ளை பிறந்தாலும் தூயாதான் என் மூத்த பொண்ணுன்னு அன்பா சொல்வாராம். அம்மாக்கிட்ட எனக்கு ஆதரவா பேசும் அதே நேரத்துல அம்மா பேச்சை கேளு அம்மாவுக்கு நல்ல பேர் எடுத்து குடு. என் ஆபீசுல எனக்கு மேலதிகாரியா வந்து என்னை நீ மிரட்டனும் தூயான்னு எனக்கு அட்வைஸ் பண்ணுவார். அவர் நம்பிக்கையை காப்பாத்த என்னாலான முயற்சிகளை செய்றேன். அதே நேரத்துல கடவுளோட ஆசிர்வாதமும் எனக்கு அமையனும்.  அதுக்கு உங்க எல்லாருடைய வேண்டுதலும் எனக்கு வேணும்.
(அந்த குட்டி பையனுக்கு என் பர்த் டே கிஃப்ட்...,)
                       
எங்க அம்மாவைவிட நான் சூப்பரா கவிதை எழுதுனும்ம்ன்னு முயற்சி பண்ணேன். ஆனால் பருங்க எக்ஸம் டென்சனில் வெற்றியோட பிறந்த நாளுக்கு எவ்வளவு யோசிச்சும் கவிதை வரலை. “வெற்றி” என்ற பேரே  அழகான கவிதையா பட்டதால் இந்த பதிவுக்கு அதையே தலைப்பாக்கிட்டேன். எப்பூடி...,

என்னடா பையனுக்கு பர்த்டே. ஆனால், அப்பாவை பத்தி புராணம் பாடுதே இந்த பொண்ணுன்னு நினைக்காதீங்க. அவன் இப்போ குட்டியா இருக்குறதால் அவனை பத்தி எழுத ஒண்ணுமில்லை. இனிதான் பேச, நடக்க, உடைக்கன்னு எல்லாம் செய்ய ஆரம்பிப்பான். அவனோட அடுத்த பிறந்த நாள் போஸ்ட்டை பாருங்க அவனை பத்தி எழுதி கல்க்கிடுறேன்..., 

எங்க வெற்றி வாழ்க்கையில எல்லாவிதமான வெற்றியும் கிடைச்சு நல்ல படியா வாழனும்ன்னு எனக்காக வேண்டிக்கிட்டு ஆசிர்வதியுங்கள் ப்ளீஸ்..., 

டிஸ்கி: பதிவெழுதுனா டிஸ்கின்னு ஒண்ணு எழுதனுமாமே. அதனால எழுதுறேன். இது என்னோட முதல் பதிவு. எல்லாமே என் முயற்சி எப்படி இருக்குன்னு சொல்லுங்க ரொம்ப கும்மிடாதீங்க அப்புறம்.... நானும் கும்ம ஆரம்பிச்சுடுவேன்.
   எனக்கு பொது தேர்வு நெருங்குறதால மார்ச் மாசம் வரை எப்பவாவது சில பதிவு போடுவேன். பரிட்சை முடிஞ்சபின் அடிக்கடி போடுவேன் அதுக்கு உங்க ஆதரவு வேணும்.

37 comments:

ராஜி said...

வரவு நல்வரவாகுக.

ராஜி said...
This comment has been removed by the author.
ராஜி said...

வெற்றிமாறனுக்கு எல்லாவித வெற்றிகளும் கிடைக்க என் ஆசிர்வாதங்கள். என் வாழ்த்தை வெற்றிக்கிட்ட சொல்லிடு தூயா.

பால கணேஷ் said...

புது தேவதைக்கு நல்வரவு. வெற்றிக்கு எல்லா விஷயத்திலும் வெற்றி கிடைக்கவும், இன்று தொடங்கும் ‘தேவதை’ வெற்றிப் பயணம் தொடர்ந்து பல சிகரங்களை எட்டவும், அதைக் கண்டு நான் மகிழவும் என் மனப்பூர்வமான நல்வாழ்த்துக்கள்மா!

பால கணேஷ் said...

அதுசரி... திரட்டிகளின் ஓட்டுப் பட்டை எதுவும் காணமே... அதில்லாம எப்படி எங்களை மிஞ்சறதாம்..?

K.s.s.Rajh said...

வணக்கம் தங்கச்சி நான் பதிவுலகை விட்டு சிலகாலம் ஒதுங்கியிருக்கேன்.
ஆனாலும் புதிதாக பதிவெழுத வந்த உங்களை வாழ்த்தி உட்சாகப் படுத்தனும் என்று கமண்ட் போடுகின்றேன்.ஏனைய பதிவுலக நண்பர்கள் மன்னிக்கவும்.பதிவுலகில் நான் விரும்பிப் படிக்கும் பதிவுகளில் உங்கள் அம்மா ராஜி அக்காவின் தளமும் ஒன்று இப்போ அக்காவின் மகள் நீங்களும் எழுத வந்திருப்பது மிக்க மகிழச்சி அசத்துங்க வாழ்த்துக்கள்.

மீண்டும் நான் பதிவுலகிற்கு திரும்பியதும் உங்கள் பதிவுகளை படிக்கின்றேன் பாராட்டுக்கள்.

Admin said...

பதிவுலகிற்கு அன்போடு அழைக்கிறோம் சகோதரி..வருக..வருக..நல்ல பதிவுகளைத் தருக.

கவிதை வீதி... // சௌந்தர் // said...

என்னப்பா இது பூட்டிக்கிடந்த கடையிலே பூ, தோரணமல்லொம் மின்னுது....


புதுசா யாரோ பிளாக் தொடங்கியிருக்காங்க தல...

புதுசாவா... அப்படின்னா டெஸ்ட் வைங்கடா டெஸ்ட்...

ஏம்மா... நல்ல பதிவா போடுவிங்களான்னு நம்ம தல கேட்குறாறு...

என்னது நல்ல பதிவா.. அதெல்லாம் முடியாது.. போப்பா...!

தல... நல்ல பதிவெல்லாம் போடமுடியாதுன்னு சொல்லிட்டாங்களா...

என்னது நம்மகிட்டேயே நல்ல பதிவு போடமுடியாதுன்னு சொல்லிட்டாங்களா..?

அப்புறம் யார் படிக்கிறது இந்த பிளாக்... போனை போட்டு நம்ம பசங்கள வரச் சொல்லுடா...


(இறுதியாய் அம்மணி பிளாக்கை மூடிவிட்டு வீட்டுக்கு ஓடுகிறார்..)


எப்பூடி...

கவிதை வீதி... // சௌந்தர் // said...

பார்றா...

ஒரு பாப்பா பாப்பாவுக்கு வாழ்த்து சொல்றதை....

வெற்றி மாறம் எதில் வெற்றிகள் குவிக்க என் வாழ்த்துக்களையும் பதிவு செய்கிறேன்...

கவிதை வீதி... // சௌந்தர் // said...

//////
விஜயின் எல்லா படங்களும்..
////////

உண்மையில் நீ பெரிய ஆளும்மா...

டாக்குடரு படம் பார்த்து நாங்களே பல கிலோ மீட்டர் ஓடுரோம்...

நீ தைரியமா சொல்ரே...

அம்மணிக்கு சுறா.. வில்லு பட சிடி பார்சல்...

கவிதை வீதி... // சௌந்தர் // said...

//////
பாட புத்தகங்களை படிக்க சொல்றதால் எந்த புத்தகமும் பிடிக்காமல் போய்டுச்சு
//////


அப்படி பேர்டுங்க அருவாள...

பாருங்க...

அப்படியோ அம்மாகிட்டே போட்டுக்குடுப்போம்ல...

கவிதை வீதி... // சௌந்தர் // said...

பதிவுலகில் நுழைந்திருக்கும் இளம் தேவதையை அன்போடு அழைக்கிறோம்...


அறிந்துக் கொள்ள மற்றும் புரிந்துக் கொள்ள இங்கு கருத்துகள் கோடிகள் உண்டு...

அன்பு காட்ட மற்றும் அரவணைக்க இங்க ஆயிரம் அன்புள்ளங்கள் உண்டு...

வாருங்கள்...

உங்களுக்கென்று ஒரு சரித்திரம் உறுவாக்குங்கள்...


இந்த தேவதையின் கனவுகள் இந்த உலகம் முழுவதும் வலம் வர வேண்டும் என்றும் எழுத்துலகில் தங்கள் படைப்புகள் நிலைக்க வேண்டும் என்றும் வாழ்த்துகிறேன்...

என்றும் அன்புடன்...
அன்பு அண்ணன்...
கவிதை வீதி சௌந்தர்...

ஆச்சி ஸ்ரீதர் said...

வாழ்த்துகள்,முதல் பதிவுன்னு நம்ப முடியல,சரவெடியா இருக்கு,வெற்றிக்கும் வாழ்த்துகள்,பதிவுலகில் வெற்றிபெறவும் வாழ்த்துகள்

சி.பி.செந்தில்குமார் said...

வாழ்த்துகள்

தூயா said...

ராஜி said...

வரவு நல்வரவாகுக.
>>>
நன்றி அம்மா

தூயா said...

ராஜி said...

வெற்றிமாறனுக்கு எல்லாவித வெற்றிகளும் கிடைக்க என் ஆசிர்வாதங்கள். என் வாழ்த்தை வெற்றிக்கிட்ட சொல்லிடு தூயா.
>>
கண்டிப்பா சொல்லிடுறேன்

தூயா said...

கணேஷ் said...

புது தேவதைக்கு நல்வரவு. வெற்றிக்கு எல்லா விஷயத்திலும் வெற்றி கிடைக்கவும், இன்று தொடங்கும் ‘தேவதை’ வெற்றிப் பயணம் தொடர்ந்து பல சிகரங்களை எட்டவும், அதைக் கண்டு நான் மகிழவும் என் மனப்பூர்வமான நல்வாழ்த்துக்கள்மா!
>>>>
வருகைக்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றி

தூயா said...

K.s.s.Rajh said...

வணக்கம் தங்கச்சி நான் பதிவுலகை விட்டு சிலகாலம் ஒதுங்கியிருக்கேன்.
ஆனாலும் புதிதாக பதிவெழுத வந்த உங்களை வாழ்த்தி உட்சாகப் படுத்தனும் என்று கமண்ட் போடுகின்றேன்.ஏனைய பதிவுலக நண்பர்கள் மன்னிக்கவும்.பதிவுலகில் நான் விரும்பிப் படிக்கும் பதிவுகளில் உங்கள் அம்மா ராஜி அக்காவின் தளமும் ஒன்று இப்போ அக்காவின் மகள் நீங்களும் எழுத வந்திருப்பது மிக்க மகிழச்சி அசத்துங்க வாழ்த்துக்கள்.

மீண்டும் நான் பதிவுலகிற்கு திரும்பியதும் உங்கள் பதிவுகளை படிக்கின்றேன் பாராட்டுக்கள்.
>>>
உங்களுக்கு நேரம் கிடைக்கும்போதே என் பதிவுகளை பாருங்கண்ணா. தங்கள் வருகைக்கும், வாழ்த்துகளுக்கும் என் நன்றிகள் அண்ணா.

தூயா said...

மதுமதி said...

பதிவுலகிற்கு அன்போடு அழைக்கிறோம் சகோதரி..வருக..வருக..நல்ல பதிவுகளைத் தருக.
>>>
நல்ல பதிவுகளை தர முயற்சிக்கிறேன். தங்கள் வருகைக்கும், வாழ்த்துகளுக்கும் என் நன்றிகள் அண்ணா.

தூயா said...

கவிதைவீதி. சௌந்தர் அண்ணா தங்கள் வருகைக்கும், ஆதரவுக்கும், கருத்துக்கும் நன்றி

தூயா said...

கவிதை வீதி... // சௌந்தர் // said...

//////
பாட புத்தகங்களை படிக்க சொல்றதால் எந்த புத்தகமும் பிடிக்காமல் போய்டுச்சு
//////


அப்படி பேர்டுங்க அருவாள...

பாருங்க...

அப்படியோ அம்மாகிட்டே போட்டுக்குடுப்போம்ல...
>>>
ஹா ஹா சொல்லுங்க அண்ணா, தாயறியாத சூல் உண்டா?

தமிழ்வாசி பிரகாஷ் said...

வருக தேவதையே... வருக....

பதிவுலகில் நிறைய கனவுகளை பகிர வாழ்த்துகிறேன்....

தூயா said...

thirumathi bs sridhar said...

வாழ்த்துகள்,முதல் பதிவுன்னு நம்ப முடியல,சரவெடியா இருக்கு,வெற்றிக்கும் வாழ்த்துகள்,பதிவுலகில் வெற்றிபெறவும் வாழ்த்துகள்
>>>
என் பதிவுகளை ரசித்தீர்களா அக்கா. தங்கள் வருகைக்கும், ஆதரவுக்கும், கருத்துக்கும் நன்றி அக்கா.

தூயா said...

சி.பி.செந்தில்குமார் said...

வாழ்த்துகள்
>>>
வாழ்த்துக்களுக்கு நன்றிங்க சார்.

தூயா said...

தமிழ்வாசி பிரகாஷ் said...

வருக தேவதையே... வருக....

பதிவுலகில் நிறைய கனவுகளை பகிர வாழ்த்துகிறேன்....
>>
நல்ல நல்ல கனவுகளை கண்டிப்பாய் பகிர்கிறென் அண்ணா. தங்கள் வாழ்த்துக்கும், ஆதரவுக்கும், கருத்துக்கும் நன்றி அண்ணா.

Anonymous said...

தேவதையின் கனவு தேவதைக்கு வாழ்த்துக்கள்..

முதல் பதிவே ஒரு அனுபவம் மிக்க படைப்பாய் உள்ளது...

சபாஷ்..சரியான போட்டி...

புலிக்கு பிறந்தது பூனையாகுமா..?

வாழ்த்துக்கள்...உங்கள் பதிவுலக பயணம் இனிதாய் அமைய...

மாதேவி said...

நல்வரவு.

தேவதையின் கனவு இனிதாகத் தொடரட்டும்.

கோவை நேரம் said...

ஆரம்பமே அசத்தலா இருக்கு ...வாழ்த்துக்கள்

வெங்கட் said...

பதிவுலகில பிரபலம் ஆகணும்.,
நல்லா வரணும்னா..

1. முதல்ல உங்க அம்மாகிட்ட போயி
நிறைய அட்வைஸ் கேளுங்க..

2. ஒண்ணுவிடாம குறிச்சி வெச்சிக்கோங்க..

3. அதுல ஒண்ணை கூட தப்பி தவறி
பாலோ பண்ணிடாதீங்க.. கூடிய சீக்கிரமே
நீங்க பிரபல பதிவர் ஆகிடலாம்..!!

:)

கீதமஞ்சரி said...

ஆஹா ... ஆரம்பமே அசத்தலா இருக்கே... பிரபல பதிவராகி அம்மாவை மிஞ்ச வாழ்த்துக்கள் தூயா.

இராஜராஜேஸ்வரி said...

கடவுளோட ஆசிர்வாதமும் கிடைத்து வெற்றி பெற பிரார்த்தனைகள்.. வாழ்த்துகள்..

Avargal Unmaigal said...

வாழ்க்கையில் எதையும் சாதிக்க முடியும் என நம்புங்கள். தாயின் உதவியுடனும் தன்னம்பிக்கையுடனும் செயல்பட்டால், எதையும் சாதிக்கலாம்.ஒருவர் உயர முடியும் என்றால், நாம் ஏன் உயரமுடியாது? முயற்சியும், தன்னம்பிக்கையும் இருந்தால் யார் வேண்டுமானாலும் வெற்றி பெற்று சாதனையாளராகலாம் .

எதையும் கொஞ்சம் வித்தியாசமா சிந்தித்து நல்ல கருத்துக்களை செய்திகளை வழங்கி வந்தால் இந்த வலைத்தளத்தில் வெற்றி பெறலாம்

நீங்கள் வெற்றி பெற எனது மனம்மார்ந்த வாழ்த்துக்கள்

Angel said...

குட்டி தேவதைக்கு இந்த பெரிய தேவதையின் மனமார்ந்த வாழ்த்துக்கள் .

திண்டுக்கல் தனபாலன் said...

வருக ! வருக ! வாழ்த்துக்கள் !

அப்பாதுரை said...

தூயா - இப்பத்தான் முதல் தடவையா கேட்கிறேன் இந்தப் பெயரை. what a beautiful name!

நிறைய சாதிச்சு நிறைய எழுத வாழ்த்துக்கள்.

Avainayagan said...

வெற்றி வாழ்க்கையில எல்லாவிதமான வெற்றியும் கிடைச்சு நல்ல படியா வாழனும்ன்னு வாழ்த்துகிறேன்.

,முதல் பதிவுன்னு நம்ப முடியல வாழ்த்துகள்

மதுரை சரவணன் said...

vaalththukkal...