Thursday, 19 July 2012

அம்மாவின் அடக்குமுறை இனி என்னிடம் செல்லாது...,

அம்மா!  என் ஃப்ரெண்ட்ஸ்லாம் சினிமாக்கு போறாங்க நானும் போகவா?
தனியாலாம் போக வேணாம், இந்த வீக் எண்ட்ல அப்பாவோட தம்பி, தங்கச்சியை கூட்டி போய் பார்த்துட்டு வா.

அம்மா! எனக்கு ட்ரெஸ் எடுக்கனும்.., போய் வரவா?
நீ தனியாலாம் போகவேணாம், நானும் வரேன்.

அம்மா! என் ஃப்ரெண்ட்ஸ்லாம் ஃபேஸ்புக், ஆர்குட் அது இதுன்னு அக்கவுண்ட் ஓப்பன் பண்ணியிருக்காங்க. நானும் அக்கவுண்ட்ஓப்பன் பண்ணிக்கட்டுமா?
நீ சின்ன பொண்ணு. அதெல்லாம் வேணாம்.

அம்மா! ஃப்ரெண்ட்ஸ்கிட்ட பேச எனக்கு மொபைல் வாங்கி தாங்கப்பா.
ஸ்கூல் படிக்குற பிள்ளைக்கு போன் எதுக்கு? எதுவா இருந்தாலும் என் போன்லயே  பேசிக்கோ.

அம்மா! இன்னிக்கு ஒரு நாள் சைக்கிள்ல போகாம ஸ்கூட்டில ஸ்கூல் போய் வரேனே ப்ளீஸ்.
 இன்னும் உனக்கு டிரைவிங்க் லைசென்ஸ் வாங்கலை. அதுக்குள்ள வண்டியா? சின்ன பொண்ணா லட்சணமா சைக்கிள்லயே போய் வா.

அம்மா! நீ இந்த தேர்தல்ல யாருக்கு ஓட்டு போடப்போறே?
நீ சின்ன பொண்ணு உனக்கு ஏண்டி அரசியல்லாம்?

இப்படி எதுக்கெடுத்தாலும் நீ சின்ன பொண்ணு, நீ சின்ன பொண்ணுன்னு என்னை டபாய்ச்சுக்கிட்டு வந்த என் அம்மா..., இனி டபாய்க்க முடியாது. ஏன்னா, இன்னியிலிருந்து எனக்கு 18 வயசு.

                                                          
இனி, நான் வண்டி ஓட்டலாம், ஓட்டு போட்டு தலைவர்களை தேர்ந்தெடுக்கலாம். போன் வாங்கலாம். பாஸ்போர்ட், விசா வாங்கி வெளிநாட்டுக்கு போயும் படிக்கலாம்.  ஐ ஜாலி! ஜாலி!
                                                
நான் சொன்னதுலாம் சரிதானுங்களே! இனி, அம்மாவோட அடக்குமுறை என்கிட்ட செல்லாதுதானே?!       

டிஸ்கி: தலைப்பு சும்மா அட்ராக்‌ஷனுக்கு.     இன்னிக்கு எனக்கு பர்த் டே. அதனால, கீழ இருக்குற கேக் எடுத்துக்கிட்டு பெரியவங்கலாம் என்னை வாழ்த்துங்க.         

16 comments:

சி.பி.செந்தில்குமார் said...

பிரியா - அம்மா, போஸ்ட் போடனும், நெட் செண்டர் போகவா?

மம்மி - தனியாவே போம்மா, நானும் வந்தா டபுள் சார்ஜ் கேப்பாங்க ;-0

Kumaran said...

நேற்றுவரை சின்ன பெண் வேடம் கொண்டிருந்த இந்த பெரிய பெண்ணுக்கு என் பிறந்த நாள் வாழ்த்துக்கள்..தொடருங்கள்,,வலையும் தங்கள் எழுத்துக்களும் அழகு வண்ணங்கள்.நன்றி.

பால கணேஷ் said...

ம்ம்ம்.. கிளிக்கு ரெக்கை முளைச்சிடுத்து... ஆனா ஆத்தை விட்டுப் பறந்து போகாது. கேக் எடுத்துக்கிட்டேன் தூயா. ரொம்ப சந்தோஷம்மா. உனக்கு என்னுடைய மனம் நிறைந்த இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள். எப்பவும் எதுலயும் சந்தோஷம் உன் கூடவே இருக்கட்டும்னு வாழ்த்தறேன்.

வரலாற்று சுவடுகள் said...

உளம் கனிந்த இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்!

அப்புறம் ஒரு விஷயம்...இந்த 'உலவு' ஓட்டுப்பட்டையை கொஞ்சம் கவனிக்கவும்., பொறுமையை சோதிக்கிறது!

K.s.s.Rajh said...

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் தூயா

ராஜி அக்கா எங்கிருந்தாலும் இங்கே வரவும்

தமிழ்வாசி பிரகாஷ் said...

தோ பார்ரா...

தூயாக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

ராஜி said...

K.s.s.Rajh said...

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் தூயா

ராஜி அக்கா எங்கிருந்தாலும் இங்கே வரவும்
>>>>
வந்துட்டேன் என்னப்பா இங்க பிரச்சனை?

ராஜி said...

தூயா சமர்த்தா அம்மாக்கு தொல்லை குடுக்காம இருக்கனும். பிறந்த நாள் வாழ்த்துக்கள்

bandhu said...

happy birthday! அடக்குமுறையா? you should be happy that someone cares! :-)

K.s.s.Rajh said...

////ராஜி said...
K.s.s.Rajh said...

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் தூயா

ராஜி அக்கா எங்கிருந்தாலும் இங்கே வரவும்
>>>>
வந்துட்டேன் என்னப்பா இங்க பிரச்சனை////

ஏன் கூப்பிட்டா பிரச்சனைக்குதான் கூப்பிடுவாங்களா வந்து உங்க பொண்ணை வாழ்த்திட்டு போங்க

அக்கா இப்ப எல்லாம் உங்கள் தளத்தின் பதிவுகள் என் டாஷ்போட்டில் வருவதில்லை எனக்கு மட்டும் இப்படியா இல்லை நீங்கள் பதிவு எழுதுவது இல்லையா

அமைதிச்சாரல் said...

இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள்..

Tamilraja k said...

இப்படியும் பதிவு எழுதி வாழ்த்துப் பெறலாமா...
வித்தியாசமான பதிவு. ரசித்தேன் மிக தாமதமாக.... எனினும் பிறந்த நாள் வாழ்த்துக்கள்
த.ம 5

என் தளத்தில் இன்று
http://tamilraja-thotil.blogspot.com/2012/08/blog-post_202.html

Prakash said...

Are you from Arni (TV Malai Dt.)??

அமர பாரதி said...

காலம் கடந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள் தூயா. நினைத்ததெல்லாம் இந்த வருடமே நடைபெற வாழ்த்துக்கள்.

Lakshmi said...

தூயா இன்னிக்குத்தான் உன்பக்கம் வெரேன் நல்லாவே எழுதுரே வாழ்த்துகள் பதிவர் சந்திப்பில் உன்னையும் உன் அம்மாவையும் சந்தித்ததில் ரொம்ப சந்தோஷமா இருந்தது

Lakshmi said...

ஒ மறந்தேன் பிலேட்டெட் பிறந்த நாள் நல் வாழ்த்துகள்