Saturday 8 September 2012

பதிவர் சந்திப்பில் கிடைத்த என் இரு ”ஆண் நன்பர்கள்”

போன மாசம் நடந்த பதிவர் சந்திப்பை பத்தி பலரும் பலவிதமா எழுதிட்டாங்க. ஒருத்தர் சந்திப்புக்கு பின், எங்கம்மாக்கு சகோதர பாசம் கிடைச்சுதுன்னு சொன்னாங்க, நல்ல நட்புகள் கிடைச்சுதுன்னு சிலர் சொன்னாங்க. ஏன் ஃபாலோயர்சும், ஹிட்சும்  அதிகமாச்சுன்னு கூட சிலர் சொன்னாங்க.

 ஆனா, எனக்கு கிடைச்சதை பத்தி நானும் எழுதனுமே. சோ, அதான் எழுதுறேன், ஆனா,  கொஞ்ச லேட்டா. எனக்கு பதிவர் சந்திப்பு மூலமா ரெண்டு ”பாய் ஃப்ரெண்ட்ஸ்” கிடைச்சிருக்காங்க. அவங்க யாருன்னு தெரிஞ்சுக்க ஆசைப்படுறீங்கதானே!?

முதல் “பாய் ஃப்ரெண்ட்”:
 இவரை சந்திப்புலதான் பார்த்தேன். பேரும், படமும் மட்டுமே அறிமுகம். அவர் எழுத்தை நான் வாசிச்சதுக்கூட இல்லை. அம்மாதான் அவரை அறிமுகப்படுத்தினாங்க. அவரை பார்த்ததும் ரொம்ப நாள் பழக்கம் போல பச்சக்குன்னு மனசுல நின்னுட்டார்.

பத்தாத குறைக்கு அவரை பற்றி மேடையில என்னையே பேச சொன்னாங்க. நான் பேசுனதை பார்த்து அவர் வெட்கப்பட்டு சிரிச்ச சிரிப்பு இருக்கே. நான் அதுலயே மெல்டாகி அவரை விரும்ப ஆரமிச்சுட்டேன். கிளம்பும்போதுகூட போன் நம்பர்கள் பரிமாறிக்கிட்டோம். டைம் கிடைக்கும்போது மீட் பண்ணலாம்ன்னு பேசி வெச்சுக்கிட்டோம். இனி அடிக்கடி அவரோட அந்த அழகு சிரிப்பை பார்க்கவும், அவரோட ஆசை வார்த்தைகளை கேட்கவும் போகனும்.

என்ன கெஸ் பண்ணீட்டீங்களா?! நீங்கலாம் யாரு? எல்லாருமே பெரிய பெரிய ஆளுங்களாச்சே?! எஸ் அவரேதான் என் மனதை கவர்ந்தவர். அவர் பெயர் திரு.சென்னைபித்தன் ஐயாதான் முதல் பாய் ஃப்ரெண்ட். 

                                     
(தன் கேர்ள் ஃப்ரெண்ட் பேசுறதை பார்த்து அவர் வெட்கப்படுற அழகை பாருங்களேன்)

ரெண்டாவது பாய் ஃப்ரெண்ட்:
 
இவர் பதிவர் இல்ல. தன்னோட அம்மாக்கு துணையா வந்தவர். வந்ததும் எனக்கு ரொம்ப பிடிச்சு போச்சு. நானே போய் அறிமுகப்படுத்திக்கிட்டு பேச ஆரம்பிச்சோம். சில வார்த்தைகள்லயே என்னை கவர ஆரம்பிச்சுட்டார்.

அப்புறம், பதிவர்கள் சுய அறிமுகம் செஞ்சுக்கிட்டு இருந்தத சத்தம் எங்களுக்கு இடைஞ்சலா இருந்ததால, பக்கத்திலிருந்த ஐஸ்கிரீம் கடையில போய் உக்காந்து மனசு விட்டு பேசிட்டு வந்தோம். 

நான் அவர்கிட்ட சொல்லிட்டு கிளம்பும்போது எனக்கு ஃபிளையிங் கிஸ்லாம் குடுத்தார். அம்மா அவசரப்படுத்தியதால் ஃபோன் நம்பர்கூட வாங்கலை. ப்ளீஸ் யாராவது வாங்கி தாங்களேன்.

கண்டிப்பா என் ரெண்டாவது பாய் ஃப்ரெண்டை கண்டுப்பிடிச்சிருக்கவே முடியாதே?! ஏன்னா, நீங்கலாம் என் அம்மாவோட பழகுறீங்களே அதான் அப்பப்போ கிட்னி வேலை செய்யாம போகும்.

என் ரெண்டாவது பாய் ஃப்ரெண்ட் பேரு ஷாம். ஆமினா ஆண்டியோட பையன்.

                                              
 (பாருங்க, தன் கேர்ள் ஃப்ரெண்டுக்கு எப்படி ஃபோஸ் குடுக்குறார்?ன்னு)

என்ன பெரியங்கலாம் வந்திருக்கீங்க. என் செலக்‌ஷன் எப்படி?ன்னு சொல்லுங்களேன்.



25 comments:

Ravichandran M said...

Interesting!
Your selection is super!

JR Benedict II said...

சூப்பருங்க சீனா ஐயா, ராமானுஜம் ஐயா கூட நல்ல friends தாங்க.. மிஸ் பண்ணிடிங்க போங்க

ஆமினா said...

ஆத்தி :-)

ஸாதிகா said...

பதிவர் சந்திப்பை வித்த்யாசமாக பகிர்ந்து இருக்கீங்க தூயா

CS. Mohan Kumar said...

Arumai :))

Yaathoramani.blogspot.com said...

அருமை அருமை
தூயா என்றால் வித்தியாசம் என்கிற
அர்த்தமும் இருக்கா ?
மனம் கவர்ந்த பதிவு
தொடர வாழ்த்துக்கள்

Prem S said...

ம்ம் உங்க ஆண் நண்பர்கள் கலக்கல்

முத்தரசு said...

அட்ரா அட்ரா சக்க

செய்தாலி said...

சகோ ராஜிஅவங்க மாதிரியே நீங்களும்
நகைச்சுவையாய் எழுதுறீங்க ம்ம்ம் நல்ல இருக்கு துயா

தொடருங்கள் படிப்பை பின் எழுத்தையும்

குட்டன்ஜி said...
This comment has been removed by the author.
குட்டன்ஜி said...

ஆகா!ஒரு படத்தில் ரேவதி,வயதான சிவாஜியை பாய் பிரண்ட் என்று கூப்பிடுவார் .அது ஞாபகம் வந்தது.மிக அருமையான பகிர்வு!

அஞ்சா சிங்கம் said...

ஆகா இது விவரமான பொன்னுங்கோ......எங்க அடையார் அஜித்தையே கவுத்துடீங்களே ............

Anonymous said...

நானும் பதிவர் சந்திப்புக்கு வந்திருந்தா ரெண்டு பாட்டிய கேர்ள் ஃப்ரண்ட் ஆக்கியிருப்பேன்..மிஸ்ஸிங்.!!!

Needujaris said...

நல்லாருக்கே

தனிமரம் said...

நல்ல பிரண்டு தான் தூயா!ஹீ

சென்னை பித்தன் said...

அன்பு பேத்தி/girlfriend,
இப்போதெல்லாம் அதிகம் வலைப்பக்கம் வருவதில்லை.அதனால் இப்போதுதான் தமிழ் மணத்தில் மேயும்போது இந்த சூடான இடுகையைப் பார்த்தேன்.மிகச் சுவைபட எழுதியிருக்கிறாய்.உன் இரு பிரண்ட்ஸும் கிட்டத்தட்ட ஒரே வயதானவர்கள் போல் தெரிகிறது!
உனக்கு என் ஆசிகளும் வாழ்த்துகளும்.

துரைடேனியல் said...

Amma maathiriye kalakkuringa. Vaalthukkal!

கேரளாக்காரன் said...

அன்பின் தூயா

இரண்டு பாய் ஃப்ரெண்டுகளும் அருமை

Riyas said...

ஆஹா..

புதிய காதலி கிடைத்த சந்தோஷத்தில் சென்னைப்பித்தன் ஐயா பதிவெழுதுறதையும் விட்டுட்டார் போல!

ஷாம் க்யூட் லவ்வர் :-)

ஒரு மாதத்துல ஒரு பதிவுக்கு மேலதிகமா எழுதினா உங்க ஊர்ல ஏதாவது வரி விதிக்கிறாங்களா..?

நம்பள்கி said...

த.ம. 17

கவிதை வீதி... // சௌந்தர் // said...

ரைட்டு....

பால கணேஷ் said...

நல்ல நண்பர்கள்தான் கிடைச்சிருக்காங்க தூயா உனக்கு. வாழ்த்துக்கள்மா.

சி.பி.செந்தில்குமார் said...

தாயைப்போல பிள்ளை நூலைப்போல சேலை ;-0

வெங்கட் நாகராஜ் said...

அட சூப்பர் நண்பர்கள் தான்...

தொடர வாழ்த்துகள்.

எல் கே said...

ஹஹஹாஹ்